பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி புதுக்குடியிருப்பில் புதிய கிளையைத் திறந்து,
வடக்கில் தனது அடைவுமட்டத்தை மேலும் விஸ்தரித்துள்ளது
இலங்கையில் வங்கி அல்லாத நிதிச்சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, 2024 ஜுலை 12 ஆம் திகதியன்று
புதுக்குடியிருப்பில் தனது புதிய கிளையொன்றைத் திறந்து வைத்துள்ளது. இல.10,
முல்லைத்தீவு வீதி, புதுக்குடியிருப்பு என்ற முகவரியில் அதிநவீன வசதிகளுடன் அமைந்துள்ள
இக்கிளையானது பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி வழங்கும் ஒட்டுமொத்த தீர்வுகள்
மற்றும் சேவைகளையும் வழங்குகின்றது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் தனது சமூகங்கள்
மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடையாளமாக, இந்த முக்கியமான தருணத்தைக்
குறிக்கும் வகையில், முல்லைத்தீவு/முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர் பாடசாலையில்
ஆதரவை எதிர்பார்த்துள்ள 50 சிறுவர்களுக்கு காலணி வவுச்சர்களை இது வழங்கியுள்ளது.
இப்புதிய கிளையானது பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரசன்னம் வட
மாகாணத்தில் தொடர்ந்தும் விரிவடைந்து கொண்டிருக்கும் நிலையில், கொடிகாமம்,
கிளிநொச்சி, சுன்னாகம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், நெல்லியடி மற்றும் தற்போது
புதுக்குடியிருப்பு என 8 கிளைகளை அது தற்போது கொண்டுள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள், சிரேஷ்ட
முகாமைத்துவ அணிகள் கலந்துகொண்ட விசேட திறப்பு விழா வைபவத்தில் புதுக்குடியிருப்பு
கிளை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் பெரும்
எண்ணிக்கையான சிரேஷ்ட அதிகாரிகள் பங்குபற்றியமை இந்நிகழ்வின் முக்கியத்துவத்தைக்
காண்பிக்கின்றது. திரு. பிரதீப் அமிர்தநாயகம் – தலைவர், திரு. உதேஷ் குணவர்த்தன – பிரதம
நிறைவேற்று அதிகாரி, திரு. முத்துலிங்கம் கிருபாகரன் – கிளை வலையமைப்பிற்கான
சிரேஷ்ட முகாமையாளர், திரு. ரஜீவ் டேவிட் – வர்த்தகநாமங்கள் மற்றும் தொடர்பாடலுக்கான
உதவிப் பொது முகாமையாளர் மற்றும் திரு. இரத்தினசிங்கம் கமல்ராஜ் – புதுக்குடியிருப்பு
கிளை முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை
குறிப்பிடத்தக்கது. மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், விருந்தினர்கள் மற்றும் ஏனைய
பணியாளர்களும் சமூகமளித்திருந்தனர்.
இந்நிகழ்வு குறித்து பிரதம நிறைவேற்று அதிகாரி உதேஷ் குணவர்த்தன அவர்கள் கருத்து
வெளியிடுகையில், “புதுக்குடியிருப்பில் எமது புதிய கிளையை திறந்து வைத்துள்ளதன்
மூலமாக, நாடளாவில் 110 இடங்களை உள்ளடக்கும் வகையில் எமது கிளை
வலையமைப்பினை நாம் விஸ்தரித்துள்ளோம். மிகவும் நெகிழ்திறன் கொண்ட மற்றும்
தொழில்முயற்சியாண்மை மிக்க மக்களுடன், இப்பிராந்தியத்தில் வளர்ச்சி கண்டு வருகின்ற
பொருளாதார மையமாக புதுக்குடியிருப்பு காணப்படுவதுடன், குத்தகை, தங்கக் கடன்கள்,
கடன்கள், நிலையான வைப்புக்கள், சேமிப்புக்கள், சூரிய மின்னுற்பத்தி குத்தகை மற்றும் பல
அடங்கலாக, எமது எமது நிதித் தீர்வுகள் மற்றும் சேவைகளை அவர்களுக்கு வழங்குவதற்கு
நாம் ஆவலாக உள்ளோம். எமது அடைவுமட்டத்தை புதுக்குடியிருப்புக்கு விஸ்தரிப்பது
தொடர்பான எமது தீர்மானம், தமது கனவுகளை நனவாக்கத் துடிக்கும் இலங்கை மக்கள்
அனைவருக்கும் ஆதரவளிக்கும் எமது அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகக் காணப்படுவதுடன்,
எமது புதிய கிளைக்கு வருகை தந்து, நிதியியல் சேவைகளில் முன்னோடியால்
வழங்கப்படுகின்ற, சந்தையில் மிகவும் போட்டித்திறன் கொண்ட கட்டண வீதங்கள், ஒப்பற்ற
அனுபவத்தைப் பெற்று மகிழுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்,” என்று
குறிப்பிட்டார்.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம் அவர்கள்
கருத்து வெளியிடுகையில், “எம்முடன் தொடர்புபட்ட தரப்பினருக்கு நிலைபேணத்தக்க
வளர்ச்சிக்கு வழிவகுத்து, எமது வாடிக்கையாளர்களுக்கான அணுகல் மட்டத்தை
அதிகரிப்பதற்கான ஸ்தானத்தில் நாம் சிறப்பாகக் காணப்படும் நிலையில், புதுக்குடியிருப்பில்
எமது புத்தம்புதிய கிளையைத் திறந்து வைப்பதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். எமது
வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சேவைகளை வழங்குவதில் எமது தொடர்ச்சியான
அர்ப்பணிப்பிற்கு அமைவாக, வடக்கில் 8 இடங்களில் எமது பிராந்திய பிரசன்னம்
விஸ்தரிக்கப்பட்டுள்ளமையால் இப்புதிய கிளையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
காணப்படுகின்றது,” என்று குறிப்பிட்டார்.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, இலங்கையிலுள்ள அனுமதி உரிமம் பெற்ற வங்கி
அல்லாத நிதியியல் நிறுவனமாக இயங்கி வருவதுடன், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட
நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பு மற்றும் ஓயாத அர்ப்பணிப்பிற்குப்
பெயர்பெற்றுள்ளது. வலுவான அத்திவாரத்துடனும், பரந்தவகைப்பட்ட தயாரிப்பு
வரிசையுடனும், மகத்துவத்தின் மீதான அர்ப்பணிப்புடனும் இயங்கி வருகின்ற பீப்பள்ஸ்
லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, இலங்கையில் மக்களுக்கு வளர்ச்சி மற்றும் சுபீட்சத்திற்கு
வித்திட்டு, நம்பிக்கைமிக்க மற்றும் நன்மதிப்புடைய நிதியியல் சேவைகள் வழங்குநர் என்ற
தனது ஸ்தானத்தை அது தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது.
புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: பிரதீப் அமிர்தநாயகம் – பீப்பள்ஸ் லீசிங் அன்ட்
பினான்ஸ் பிஎல்சியின் தலைவர் (இடது) அவர்கள், உதேஷ் குணவர்த்தன – பீப்பள்ஸ் லீசிங்
அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி (மத்தி), முத்துலிங்கம் கிருபாகரன் கிளை வலையமைப்பிற்கான சிரேஷ்ட முகாமையாளர் (வலது) ஆகியோருடன் இணைந்து
புதுக்குடியிருப்பு கிளையை வைபவரீதியாக திறந்து வைப்பதையும், நிகழ்வில் இடம்பெற்ற
ஏனைய சிறப்பம்சங்களையும் படத்தில் காணலாம்.