பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி கண்டி எசல பெரஹரவிற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றது


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, வரலாற்றுப்புகழ் மிக்க கண்டி எசல பெரஹரவிற்கு அனுசரணை வழங்கி, கலாச்சார பாரம்பரியத்திற்கு ஆதரவளிக்கும் தனது மரபினை தொடர்ந்தும் பெருமையுடன் முன்னெடுத்துள்ளது.  

அண்மையில் இடம்பெற்ற வைபவமொன்றில், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்சீவ பண்டாரநாயக்க, பிரதம தொழிற்பாட்டு அதிகாரி உதேஷ் குணவர்த்தன, வர்த்தகநாம ஊக்குவிப்பு மற்றும் தொடர்பாடல்களுக்கான உதவிப் பொது முகாமையாளர் ரஜீவ் டேவிட் மற்றும் கிளை முகாமையாளர் தினேஷ் விலாராச்சிகே ஆகியோர் ஒன்றிணைந்து காசோலைக்கான அனுசரணையை ஸ்ரீ தலதா மாளிகையின் தியவனத நிலமே பிரதீப் நிலங்க தெல அவர்களிடம் கையளித்து வைத்துள்ளனர்.   பிரதீப் நிலங்க தெல அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் வழங்கியுள்ள தாராளமான பங்களிப்புக்கான தனது நெஞ்சார்ந்த நன்றியை வெளிப்படுத்தியதுடன், இலங்கையின் செழிப்பான பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை பேணிப் பாதுகாப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற இந்த மரியாதைக்குரிய கலாச்சார திருவிழாவினைக் கட்டிக்காத்து,

புகைப்படத்தில் உள்ளவர்கள்: சஞ்சீவ பண்டாரநாயக்க – பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர், PLC அவர்கள் அணுசரனையை ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல அவர்களிடம் கையளித்து வைப்பதுடன், (இடப்புறமிருந்து) தினேஷ் விலாராச்சிகே – கிளை முகாமையாளர், PLC கண்டி கிளை, ரஜீவ் டேவிட் – உதவிப் பொது முகாமையாளர், வர்த்தகநாம ஊக்குவிப்புக்கள் மற்றும் தொடர்பாடல், PLC, உதேஷ் குணவர்த்தன – பிரதம தொழிற்பாட்டு அதிகாரி, PLC ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.