பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள் ஐரோப்பிய விருது அதிமேதகு இலங்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பெறுமதிமிக்க  சிறந்த நடைமுறைகள் ஐரோப்பிய விருதினை பீப்பள்ஸ் லீசிங்கின் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்த்ர மார்செலின் முன்னிலையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கான தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கத்தின்  ஐரோப்பிய விருதுகளின் வருடாந்த அங்கீகாரத் திட்டத்தின் கீழ், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி 2022இல் சிறந்த நடைமுறைகளுக்கான ஐரோப்பிய விருதை பெற்றுக்கொண்டது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் தலைவர்பிரதீப் அமிர்தநாயகம் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்த்ர மார்செலின் ஆகியோர் பெல்ஜியத்தின் பிரசல்ஸில் உள்ள, லீ பிளாசா பெல்ரூமில் (Le Plaza’s Ballroom) ‘தியேட்டரில்’ விருதைப் பெற 11 டிசம்பர் 2022இல்  அழைக்கப்பட்டனர். இது வரலாற்று தருணமாக கருதப்படுகிறது.

தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கத்தின் (ESQR) கருத்துக்கணிப்புகள், நுகர்வோர் கருத்து ஆராய்ச்சி மற்றும் சந்தை ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொது நிர்வாகங்கள் விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டன. வாடிக்கையாளர்கள், நுகர்வோர், முன்னைய விருது பெற்ற நிறுவனங்கள், அமைப்புகள், விநியோகஸ்தர்கள், ஒத்துழைப்புத் தரும் நிறுவனங்கள் அல்லது நலம் விரும்பிகள் வாக்காளர்களாக இருக்கலாம். தெரிவு செயன்முறையில், பொது தகவல் ஆதாரங்கள், வெளியீடுகள் மற்றும் நேர்மறையான கருத்துக்கள், தொண்டு திட்டங்கள், சபைகள் மற்றும் பல்கலைக்கழக திட்டங்கள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியன உள்ளடங்கும்.

தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கம் (ESQR) சுவிட்சர்லாந்தின் லொசேன்னை தலைமையகமாகக் கொண்டு, தர மேம்பாடு நுட்பங்களை அங்கீகரித்து ஆராய்ச்சி செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஐரோப்பிய அமைப்பாகும். இது நிறுவனங்கள், வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்களின் தர மேலாண்மை உத்திகளில் சிறந்த நடைமுறைகளையும் விளைவுகளையும் கண்காணிக்கிறது. தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கம், சிறப்பம்சங்கள், புதுமை மற்றும் தொலைநோக்கு சிந்தனையை ஊக்குவிப்பதோடு, அறிவைப் பகிர்ந்து இணக்கமான மதிப்பீட்டு நடைமுறைகள் மற்றும் வசதிகளைப் பகிர்ந்து கொள்கிறது.

நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும்.  1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஸில் ஒரு  துணிகர வெளிநாட்டு முயற்சி உட்பட, ஆறு துணை நிறுவனங்களைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங்கின் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், தர ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்ட விருதினை கையளிப்பதையும், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்த்ர மார்செலின் அருகில் இருப்பதையும் படம் சித்தரிக்கின்றது.