Corporate Management

மக்கள் குத்தகை மற்றும் நிதி PLC: நம்பகமான தலைவர்
<<<<<<< HEAD

திரு. ஷமிந்திர மார்செலின்

பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர்

இலங்கை DFCC வங்கியின் சிரேஷ்ட உப தலைவரும் நிறுவன வங்கிச் சேவைப் பிரதானியுமாகிய திரு. ஷமிந்திர மார்செலின், 2020 நவம்பர் 20ஆம் திகதி தொடக்கம் பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்; பொது முகாமையாளராகவும் இணைந்துள்ளார்.

HSBC குழுமத்திற்காக வெளிநாடுகளில் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிச் சேவைகளில் பரந்த அனுபவத்தையும் பெற்ற வங்கியாளரான திரு. மார்செலின், பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் மூலோபாய முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் வங்கித் துறை சார்ந்த தனித்துவமான நுண்ணறிவைக் கொண்டுள்ளார்.

அவர் DFCC வங்கியில் சேவையாற்றியபோது, அந்த வங்கியின் நிறுவன வங்கிச் சேவை மூலோபாயங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், மாலைதீவைச் சேர்ந்த பிரபல கம்பனி ஒன்றினால் பெறப்பட்ட இரட்டைத் தவணை இருதரப்புக் கடன் வசதிக்கான தனி ஆலோசகர் மற்றும் கட்டமைப்பு வங்கிக்குரிய அதிகாரமளிப்பை DFCC பெற்றுக்கொள்வதில் அவர் முக்கிய பங்கினை வகித்தார். இலங்கை DFCC வங்கியினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய கடன் வசதி இதுவாகும்.

வங்கியின் நிறைவேற்றுக் குழு, சொத்து மற்றும் பொறுப்புக் குழு, செயற்பாட்டு இடர் முகாமைத்துவக் குழு ஆகியவற்றின் அங்கத்தவர் என்ற முறையில் வங்கியின் நிறுவன முன்முயற்சிகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு திரு. மார்செலின் முக்கியமான மூலோபாய பங்களிப்பினை வழங்கினார்.

HSBC குழுமத்தின் மாலைதீவு நாட்டிக்கான முகாமையாளர் என்ற முறையில் வெவ்வேறு பதவிகளில் செயலாற்றியதைத் தொடர்ந்தே அவர் DFCC வங்கியில் இணைந்தார்.

மாலைதீவில் வங்கித் தொழிற்றுறையின் புரட்சிகரமான மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்த அவர், அந்த வேளையில் மாலைதீவின் மிகப் பெரிய சொத்துத் திரட்டலுக்கும் பொறுப்பாக இருந்தார்.

=======

திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்க

பிரதம நிறைவேற்று அதிகாரி

திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்க, 36 வருடங்களுக்கு மேலான தொழில்சார் அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், அதில் 31 வருடங்கள் வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் துறையில் (NBFI) அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் (PLC) நிறுவனத்துடன் நிதியியல் மற்றும் நிர்வாக பிரதி பொது முகாமையாளராக இணைந்து கொண்டார். PLC இல் இவர் பிரதான பிரிவுகளான நிதியியல், திறைசேரி, நிர்வாகம், மனித வளங்கள், தகவல் தொழில்நுட்பம், கடன் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய பிரிவுகளுக்கு தலைமைத்துவமளித்துள்ளார். இவரின் முயற்சிகளினால், வங்கிசாராத நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வரிசையில் 15 வருடங்களாக PLC ஐ முன்னிலையில் திகழ முடிந்துள்ளது.

திரு. பண்டாரநாயக்க, இலங்கை, பட்டய கணக்காளர் நிறுவகம், அவுஸ்திரேலியா சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் மற்றும் இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் சங்கம் ஆகியவற்றின் அங்கத்தவராக திகழ்கின்றார். அத்துடன், இவர் முகாமைத்துவ கணக்காளர்கள் பட்டய நிறுவகத்தின் (ஐக்கிய இராஜ்ஜியம்) இறுதியாளராகவும் திகழ்கின்றார். 2009, 2013 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கை மத்திய வங்கி இவரை நியமித்திருந்தது.

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) பணிப்பாளராக இவர் 10 வருடங்களுக்கு மேலாக திகழ்கின்றார். லீசிங் சம்மேளனத்தில் இவர் இரு தடவைகள் அங்கம் பெற்றுள்ளதுடன், 10 வருடங்களுக்கு மேலாக பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் செயலாற்றியுள்ளார். நிதிச் சேவைகளை வழங்கும் இல்ல சம்மேளனத்தின் (Finance House Association) பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் இவர் திகழ்ந்தார்.

>>>>>>> PLC-1536_hotfix

திரு. உதேஷ் குணவர்தன

பிரதி பொது முகாமையாளர் - கணக்காய்வூ

திரு. பிரபாத் குணசேன

சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் - தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்

திரு. ரனில் பெரேரா

பிரதி பொது முகாமையாளர் - இடர் மற்றும் கட்டுப்பாடு

திரு. ஒமல் சுமனசிறி

பிரதி பொது முகாமையாளர் - நிதி

திரு. நீல் துசாந்த

உதவி பொது முகாமையாளர் - கிளை வலையமைப்பு

திரு. கணேசன் துஷ்யந்தன்

உதவி பொது முகாமையாளர் - கிளை வலையைமைப்பு

திரு. நளின் டி சில்வா

உதவி பொது முகாமையாளர் - வசூலிப்புகள்

திரு. அமிந்த ராஜபக்ச

உதவி பொது முகாமையாளர் - உள்ளக கணக்காய்வு

திரு. ரஜீவ் டேவிட்

உதவி பொது முகாமையாளர் - வர்த்தக நாமங்கள் மற்றும் தொடர்பாடல்

சைரா கலீல்

உதவி பொது முகாமையாளர் - ஒழுக்கம்

திரு. வஜிர ராமநாயக்க

உதவி பொது முகாமையாளர் - கடன்

ஷாலினி சில்வா

உதவி பொது முகாமையாளர் - கம்பனி செயலாளர்