எங்கள் குழு


பீப்பள்ஸ் இன்ஷஷுரன்ஸ் பிஎல்சி

பீப்பள்ஸ் லீசிங் பிஎல்சி நிறுவனமானது வாழ்க்கைக் காப்பீடற்ற காப்புறுதி வழங்குனராக பதிவு செய்யப்பட்டு 2009 ஜுலை மாதம் 22 ஆம் திகதி இணைக்கப்பட்டதுடன் வருமானத்தின் அடிப்படையில் 2016 இல் ரூபா 4 பில்லியனாக காணப்பட்டதன் ஊடாக (இலங்கை காப்புறுதியாளர்கள் சங்கத்தின் தரவுகளுக்கமைய) தற்பொழுது இலங்கையின் 6 ஆவது மிகப்பெரிய வாழ்க்கைக் காப்பீடற்ற காப்புறுதி நிறுவனமாக திகழ்கின்றது. நிறுவனத்தின் இலக்கானது சிறந்த நம்பிக்கையூடனான உறுதிமிக்க நிலையான துறையை கட்டியெழுப்புவதாகும். அந்தவகையில் எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் நிலையான எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறந்த உயர்தரமான காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் எமது வியாபார மற்றும் சேவைகளையும் வாடிக்கையாளர்களுடன் இணைந்தவாறு அவர்களுடன் ஒருமித்து நட்பான முறையில் எமது சேவைக் குழாம் ஆக்கபூர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை நாம் எமது நோக்கை அடைவதற்குரிய குறிக்கோளாகக் கொண்டு இயங்கிவருகின்றௌம்.

எமது உற்பத்திகள் பிரதானமாக இரண்டு வகைப்படுத்தப்படுகின்றது: வாழ்க்கைமுறை உற்பத்திகள் மற்றும் வியாபார உற்பத்திகள். எமது வாழ்க்கைமுறை உற்பத்திகள் பிரதானமாக தனிப்பட்டவர்களின் தேவைகளை உள்ளடக்கியதாக தீ, வீடு, மோட்டார் வாகன பிரயாணங்கள், சூரிய சக்தி பெனல்கள், மற்றும் தனியார் விபத்துக் காப்பீடு போன்ற காப்புறுதித் தீர்வுகளையும் வியாபார உற்பத்திகள் வெகுவாக வர்த்தக நடவடிக்கைகளை மையமாகக்கொண்டு சரக்கு மோட்டார் வாகனங்கள் பொது பொறுப்புக்கள் திருட்டு தொழில்சார் பொறுப்புக்கள் இயந்திர உபகரணங்களது காப்பீடுகள் என்பன அடங்கும்.

www.peoplesinsurance.lk


பீப்பள்ஸ் மைக்ரோஃபினேன்ஸ் லிமிட்டட்.

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிலையான முறையில் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பீப்பள்ஸ் மைக்ரோ ஃபினேன்ஸ் லிமிட்டட் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி குழுமத்தில் இணைக்கப்பட்டது. முன்னணியில் திகழும் சிறு நிதியுதவிகளை வழங்கும் நிறுவனமான இது இலங்கையின் பொருளாதார ரீதியாக குறைந்த வருமானமுடைய உற்பத்தியாளர்களது வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியுதவிகளை நிலையான நெறிமுறையான மற்றும் இலாபகரமான முறையில் வழங்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே நோக்காகக்கொண்டு செயற்பட்டுவருகின்றது.

எமது பிரதான உற்பத்தியானது, பொதுவான கடன்கள் (எமது வாடிக்கையாளர்களது திருப்பிச் செலுத்தும் ஆற்றலடிப்படையில் அவர்களது சுய தொழில் விருத்தியுடன் படிப்படியாக அதிகரிக்கப்படும்) அடி மட்டத்திலுள்ளவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர் கடன்கள் (பொருளாதார ரீதியில் உறுதியான விவசாய கால்நடைகள் வளர்ப்பு மற்றும் சிறு தொழில்களை மேற்கொள்ளும் குடும்பங்களுக்குரியது) மற்றும் சொத்து அடிப்படையிலான கடன்கள் (சொத்துக்களை ஆதனமாகக்கொண்டு விவசாய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் கொள்வனவு செய்தல் என்பவற்றுக்குரியது).


பீஎல்சீ பிலீட் மெனேஜ்மன்ட

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பீப்பள்ஸ் லீசிங் கம்பனி பிலீட் மெனேஜ்மன்ட் லிமிட்டட் குழுமத்தில் இணைக்கப்பட்டதுடன் இதன் பிரதான வியாபார நடவடிக்கைகளாக வாகன மதிப்பிடல்கள், வாகனங்கள் வாடகைக்கு வழங்கல் சேவைகள் மற்றும் வாகன விற்பனை போன்றவற்றை எதிர்கால தேவைகளுக்கேற்ற சிறந்த சேவை வழங்குனராக திகழும் நோக்கில் செயற்படுத்தப்படுகின்றது. எமது குறிக்கோளானது மிகவூம் சிறந்த நோக்கத்துடனான சுற்றாடலுக்கு ஏதுவான சேவைகளை பெற்றுக்கொடுத்து டிஜிட்டலாக்கத்துடன் முன்னணியில் திகழும் இலங்கையின் ஒரே பிலீட் முகாமைச் சேவை நிறுவனமாக உயர்தலாகும்.

நாம் வாகன பிலீட் சேவைகள் (நீண்ட கால குத்தகை குறுகிய கால குத்தகை மற்றும் மீட்புச் சேவைகள்) மதிப்பிடல் சேவைகள்(மூன்றாம் தரப்பு மதிப்பிடல் இயந்திர உபகரணங்கள் மற்றும் காப்பீடு கொடுப்பனவுகளுக்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளல்.) மற்றும் வாகன விற்பனைத் துறையிலும் ஈடுபட்டுள்ளோம்.


பிஎல்சி ப்ரொப்பரட்டி டிவலொப்மன்ட் லிமிட்டட்

பிஎல்சி ப்ரொப்பர்ட்டி டிவலொப்மன்ட் லிமிட்டட் ஆனது 2008 ஆகஸ்ட் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமான முறையில் கிளை நிறுவனமாக இணைக்கப்பட்டதுடன், சொத்துக்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் சொத்துக்களை குத்தகைக்கு வழங்கல் விசேடமாக மக்கள் வங்கி மற்றும் பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபினேன்ஸ் பிஎல்சி நிறுவனங்களின் கிளைகளது நிர்மாணப் பணிகளை கண்காணித்தல் இதன் விசேட பணியாவதுடன் ஏற்கனவே 13 செயல் திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.


பிஎல்சி ஹெவ்லொக் ப்ரொப்பர்ட்டீஸ் லிமிட்டட

பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்ட்டீஸ் லிமிட்டட் (பி.எல்.எச்.பி.எல்) 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி துணை நிறுவனமாக இணைக்கப்பட்டதுடன் அலுவலக கட்டடங்களை நிர்மாணித்தல் மற்றும் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு அவற்றை செயற்படுத்தல் இதன் பிரதான பணிகளாகும்.


லங்கன் எலாயன்ஸ் பினான்ஸ் லிமிட்டட் (LAF)

எலாயன்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் கம்பனி லிமிட்டட்டின் 51 மில்லியன் சாதாரண பங்குகளுக்குச் சமமான மொத்த வழங்கப்பட்ட மூலதனத்தில் 51% ஐ சுவீகரிக்கும் நடவடிக்கை 2017ஆம் ஆண்டு டிசெம்பரில் நிறுவனத்தினால் பூர்த்தி செய்யப்பட்டது. இக் கம்பனி பங்களாதேஷின் நிதி நிறுவனங்கள் சட்டம் 1993 இன் கீழ் வியாபாரத்தை மேற்கொள்வதற்காக பங்களாதேஷில் கூட்டிணைக்கப்பட்டதாகும். பின்னர் இந்த உப கம்பனியின் பெயர் லங்கன் எலாயன்ஸ் பினான்ஸ் லிமிட்டட் என்று மாற்றப்பட்டது.

www.lankanalliance.com