நட்பான குத்தகை
நீங்கள் ஒரு விசேடத்துவமான உத்தியோகத்தராயின், வர்த்தகராயின், அல்லது பாரிய மற்றும் பல்தேசிய, கூட்டு நிறுவனமொன்றின் உறுப்பினராயின் உங்கள் தொழில் தன்மைக்கு எற்ப முன்ணணி அடிப்படையில் லீசிங் வசதிகள் இங்கு பெற்றுத்தரப்படும்.
பிரதிபலன்கள்
- நாடளாவியரீதியில் அமைந்துள்ள கிளை வலையமைப்பின் ஊடாக நட்புறவான துரித சேவையுடன் இலகுவான தவணைக் கட்டண முறைகள்.
- இதனூடாக கார்கள், பஸ் வண்டிகள், லொறிகள், ஜீப் வண்டிகள், உழவு இயந்திரங்கள், முச்சக்கர வண்டிகள், விவசாய உபகரணங்கள், மற்றும் கட்டுமான இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியும்.
- ஆகக்குறைந்த ஆவணங்கள், போட்டிமிக்க வட்டி விகிதங்கள் மற்றும் துரித சேவை வசதி.
- பல்வேறு லீசிங் முறைகள் காணப்படுவதுடன், பல்வேறு சலுகைகளுடன் ஆரம்பப்படி, பலூன் மற்றும் எஞ்சிய மதிப்பீட்டுத் தொகை போன்ற முறைகளும் காணப்படுகின்றன.
- உற்பத்தியாண்டு, கடன் தொகை மற்றும் வருமான அளவு போன்றவைகளை கருத்திற்கொள்ளாது அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் சலுகைகள் காணப்படுகின்றன.
- முக்கிய வசதிகளுடன் பரந்தளவிலான வாகன காப்புறுதிச் சலுகைகள் பீப்பல்ஸ் இன்ஷூரன்ஸ் பிஎல்சி ஊடாக பெற்றுத்தரப்படும்.
கட்டண விருப்பங்கள்
இப்போது உங்களது மாதாந்த லீசிங் கட்டணங்களை PLC Online, PLC Touch App, நாடு முழுவதும் அமைந்துள்ள மக்கள் வங்கி வலையமைப்பின் CDM (Cash Deposit Machines) மற்றும் SLT-Mobitel mCash மூலமாக மேற்கொள்ளலாம்.
மேலதிக தகவல்களுக்கு PLC இன் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவைக்கு அழைக்கவும் 0112206300.
நாங்கள் வழங்குகிறோம்
லைப் ஸ்டைல் லீஸ்
உங்கள் வாகனக் கனவை நனவாக்கிட முன்னணி வாகன விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த சலுகைகளைப் பெற்றிடுங்கள.
பிரதிபலன்கள
- கடன் தொகையை மீளச் செலுத்த சலுகைக் காலம் வழங்கப்படும்.
- பிணையாளர்கள் மூலம் அல்லது பிணையாளர்கள் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
பிஎல்சி கனரக மோட்டார் வாகன லீசிங்
கனரக மோட்டார் வாகனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிரமாணப் பணிகளை மேற்கொள்பவர்களது கனரக வாகனத் தேவையை நிவர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட சிறந்த தீர்வுகள்.
பிரதிபலன்கள்
- வாகனப் பதிவு இலவசம், முதல் வருட வாகனக் காப்பீடு மற்றும் தாங்கி நிரம்ப எரிபொருள் இலவசம் முன்ணணி வாகன வழங்குனர்களிடமிருந்து விலைக்கழிவுகள் மற்றும் 90% வரையிலான கடன் வசதிகள்.
- லொறி மற்றும் டிப்பர் வண்டி கொள்வனவிற்கு விசேட கவனம் செலுத்தப்படும்.
பிஎல்சி மோட்டர் கோச் லீசிங்.
முன்ணணி இந்திய நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இத் தீர்வின் மூலம் பாடசாலை சேவை சுற்றுலாத்துறை மற்றும் போக்குவரத்துச் சேவைகளை வழங்குபவர்களது நலன் கருதி பல்வேறு சலுகைகளை உள்ளடக்கியதாக புத்தம் புதிய வாகனங்களுக்காக இத்தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதிபலன்கள
- பாடசாலை மாணவர்களது போக்குவரத்துக்காக கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட சலுகைகள்.
- சுற்றுலாத்துறை வாடிக்கையாளர்களுக்கு 100% லீசிங் வசதிகள்.
- வாகனப் பதிவூ இலவசம், முதல் வருட வாகனக் காப்பீடு மற்றும் தாங்கி நிரம்ப எரிபொருள் இலவசம், முன்ணணி வாகன வழங்குனர்களிடமிருந்து விலைக்கழிவுகள் மற்றும் 90% வரையிலான கடன் வசதிகள்.
பிஎல்சி முச்சக்கர வண்டி லீசிங்.
பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளுக்காக வேண்டியே விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்ட லீசிங் வசதி:
- உங்கள் கைவசமுள்ள முச்சக்கர வண்டிக்கு மீள் லீசிங் செய்யும் வாய்ப்பு.
- வாடகைக்கு முச்சக்கர வண்டியோடுபவர்களுக்கு சொந்தமாகவே முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்யத்தக்க வாய்ப்பு.
- பதிவு செய்யப்படாத அல்லது பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்ய நாடும் அனைவருக்காகவும்.
பிரதிபலன்கள்
- ஆகக்குறைந்த செயற்பாட்டுக் கட்டணம்.
- ஆகக் குறைந்த ஆவணத் தேவைகள் மற்றும் துரித கடன் திருப்ப நேரம்.
- ஒரு நாளுக்குள் கடனைப் பெற்றுக்கொள்ளும் வசதி.
பிஎல்சி விவசாய லீஸ்
நெல் ஆலை உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலை தோட்டக்காரர்கள், மற்றும் இறப்பர் மற்றும் மிளகு பயிர் செய்பவர்கள், உட்பட அனைத்து குத்தகைத் தேவையுடைய உங்கள் அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வேண்டி உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதிபலன்கள்
- நான்கு சில்லு உழவு இயந்திர வண்டிகள், அறுவடை செய்யும் இயந்திரங்கள், மற்றும் நிறங்களை வேறுபடுத்தும் இயந்திரங்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவமளிக்கப்படும்.
- நிரந்தர வாடகைக் கொடுப்பனவு முறை அல்லது பருவகால வாடகைக் கொடுப்பனவு முறையில் கொடுப்பனவை தெரிவு செய்யும் வசதி.
பிஎல்சி SME லீஸ்
குடும்பத்துக்குச் சொந்தமான வர்த்தகங்கள் மற்றும் பங்குடமை வியாபாரங்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு தெரிவு செய்வதற்குரிய சிறந்த முறைமையாகும்.
பிரதிபலன்கள்
- ஆகக் குறைந்த ஆவனங்களை கொண்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமாதல்.
- முதல் வருட வாகனக் காப்பீடு மற்றும் தாங்கி நிரம்ப எரிபொருள் இலவசம் முன்னணி வாகன வழங்குனர்களிடமிருந்து விலைக்கழிவுகள். (லேய்லண்ட், டிமோ மற்றும் செனொக்).
- மென்ரக வாகனங்கள் மற்றும் படி ட்ரக் வண்டிகளுக்கு லீசிங் வழங்குகையில் விசேட கவனம் செலுத்தப்படும்.
- வாடிக்கையாளர்களின் பணப் புழக்கத்துக்கு ஏற்றவாறு நெகிழ்ச்சிமிக்க லீசிங் கொடுப்பனவு முறைகள்.