பீப்பள்ஸ் லீசிங் இரண்டு சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர்களை நியமித்துள்ளது
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) நிதிப் பின்னணியில் இருந்து சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர்கள் இருவரை நியமிப்பதாக அண்மையில் அறிவித்தது. உதேஸ் குணவர்தன பிரதம செயற்பாட்டு அதிகாரியாகவும், லக்ஸந்த குணவர்தன பிஎல்சி கிளை வலையமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த நியமனம் 31 ஒக்டோபர் 2022 முதல் நடைமுறைக்கு வந்தது.
கணக்கியல், கணக்காய்வு, நிதி முகாமைத்துவம் மற்றும் திறைசேரி செயற்பாடுகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட முக்கியத்துவத்துடன் நிதித்துறையில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை உதேஸ் குணவர்தன பெற்றுள்ளார். அவர் நிதித் துறையில் சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார். ஒரு தலைவராகவும் அவர் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பிஎல்சியின் துணை நிறுவனமான லங்கா அலையன்ஸ் பினான்ஸ் லிமிடெட் பங்களாதேஷ் நிறுவனத்தில் முக்கிய பதவியை வகித்துள்ளார்.
லங்கா அலையன்ஸ் பினான்ஸ் லிமிடெட் பங்களாதேஷின் நிர்வாகமற்ற (Non-Executive) பணிப்பாளராகவும் உதேஷ் பணியாற்றியுள்ளார். இலங்கைப் பட்டயக் கணக்காளர் கழகத்தின் இணை உறுப்பினராகவும், இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் உள்ளார். அவர் திறைசேரி, முதலீடுகள் மற்றும் இடர் முகாமைத்துவம் (IBSL) ஆகியவற்றில் டிப்ளோமோ பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய கணனி சமூகத்தின் (Australian Computer Society) World Prize Winner என்ற விருதையும் வென்றுள்ளார்.
லக்ஸந்த குணவர்தன பெருநிறுவன சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிதியளிப்பில் 27 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். கடன், சந்தைப்படுத்தல், Portfolio முகாமைத்துவம், கிளை மேம்பாடு மற்றும் செயற்பாடுகள் என பல்துறை திறன் கொண்டவர். 10 வருடங்கள் கூட்டுத்தாபன குத்தகைத் தலைவராகவும், 03 வருடங்கள் சந்தைப்படுத்தல் தலைவராகவும் தனது தலைமைப் பண்புடன் செயற்பட்டுள்ளார். சவால்களை எதிர்கொள்ளும் தலைமைத்துவ பண்பு, நிலைபேறாண வணிக வளர்ச்சி மற்றும் மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை அவரின் சாதனைப் பயணத்தின் பெறுபேறுகளாகும்.
லக்ஸந்த பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான பீப்பள்ஸ் மைக்ரோ கொமர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றினார்.
அவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளதோடு அவுஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட நிர்வாகக் கணக்காளராக உள்ளதோடு ஆசியா இ பல்கலைக்கழகத்தில் மூலோபாய சந்தைப்படுத்தலில் எம்எஸ்சி பட்டத்தைப் பெற்றுள்ளார். அவர் சிஎம்ஏ (அவுஸ்திரேலியா) மற்றும் சிபிஎம் (ஆசியா) ஆகியவற்றிற்கு தகுதி பெற்றவர். மேலும், அவர் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தின் இணை உறுப்பினராக காணப்படுவதோடு அந்த நிறுவனத்தில் கடன் முகாமைத்துவத்தில் டிப்ளோமாவை பெற்றுள்ளார். லக்ஸந்த இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட அங்கத்தவர் என்பதோடு இலங்கை பணிப்பாளர் நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
அவர் இலங்கையின் பட்டய நிபுணத்துவ முகாமையாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார். பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் பங்களாதேஸில் ஒரு வெளிநாட்டு முயற்சி உட்பட நிபுணத்துவம் வாய்ந்த ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கி அல்லாத நிதியியல் சக்தியாக வளர்ந்துள்ளது.