உலக பாரம்பரிய தளமான சீகிரியவின் முறையான கழிவு முகாமைத்துவத்திற்கு பீப்பள்ஸ் லீசிங் பங்களிக்கிறது


தம்புள்ளை தொல்பொருள் திணைக்களம், தம்புள்ளை பிரதேச சபை மற்றும் தம்புள்ளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய கலாச்சார நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் அடையாளம் காணப்பட்ட தேவையின் அடிப்படையில், தம்புள்ளையில் உள்ள சீகிரிய குன்று கோட்டையில் கழிவுகளை பிரிக்கும் தொட்டிகளை அமைப்பதற்கு, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பு முயற்சிகளில் ஒன்றாக தமது பங்களிப்பை வழங்குகின்றது.  பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்திர மார்செலின் கருத்திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முன்முயற்சியின் முதன்மை நோக்கம் நமது நாட்டின் புராதன உலக பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உதவுவதற்கும் முறையான கழிவகற்றல் அமைப்பை உருவாக்குவதுமாகும்.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் உதவி பிராந்திய முகாமையாளர் சுசில் பிரியந்த,  தம்புள்ளையில் உள்ள மத்திய கலாச்சார நிதியத்தின் சீகிரிய திட்டத்தின் திட்ட முகாமையாளர் உபுல் நிஷாந்த, தம்புள்ளை தொல்பொருள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தனுக உதயநாக, தம்புள்ளை பிரதேச சபையின் செயலாளர் செனவிரத்ன, தம்புள்ளை சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் தயந்த வீரசேகர மற்றும் தம்புள்ளை பொது சுகாதார பரிசோதகர் வசந்த குமார ஆகியோரால், 06 ஏப்ரல் 2022 அன்று விழிப்புணர்வு அறிவிப்புகளுடன் நிறுவப்பட்ட குப்பைத் தொட்டிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் நிலைத்தன்மையின் முகாமையாளர் ஹிஷான் வெல்மில்ல மற்றும் பீப்பள்ஸ் லீசிங் தம்புள்ளை கிளையின் முகாமையாளர் சதுரங்க நாகொடவிதான, தம்புள்ளை பிரதேச சபையைச் சேர்ந்த ஏ.ஐ.அஹமட், மத்திய கலாசார நிதியத்தைச் சேர்ந்த சஜித் விஜேசூரிய மற்றும்  பீப்பள்ஸ் லீசிங் தம்புள்ளை கிளையின் ஏனைய பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

கழிவு முகாமைத்துவம் என்பது பல்வேறு வகையான கழிவுப்பொருட்களின் வழக்கமான சேகரிப்பு, போக்குவரத்து, செயலாக்கம், அகற்றல் அல்லது மீள்சுழற்சி மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. குப்பைகளை பிரித்தெடுப்பதை முறையாக நிர்வகிப்பதன் மூலம், கணிசமான அளவு பணத்தை மீதப்படுத்தலாம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் தடுக்கலாம்.

சீகிரிய “லயன் ரொக்“ என இது அழைக்கப்படும். இது தம்புள்ளையில் அமைந்துள்ள ஒரு குன்று, கோட்டை, பழமையான அரண்மனை மற்றும் கோட்டை வளாகமாகும், இது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்க்கிறது. பழங்கால கட்டிடக்கலை, வரலாற்று சிறப்பு, கலை, நகர திட்டமிடல், ஹைட்ரொலிக் (hydraulic) தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார நிலப்பரப்பு அம்சங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகளாவிய மதிப்பின் காரணமாக சீகிரியா யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட உலக பாரம்பரிய தளமாகும்.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, பங்களாதேஷில் வெளிநாட்டுச் செயற்பாடுகள் உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கியல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ந்துள்ளது. அதன் 25ஆவது ஆண்டு விழாவை 31 மே 2021 அன்று கொண்டாடியது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் உதவி பிராந்திய முகாமையாளர் சுசில் பிரியந்த, தம்புள்ளையில் உள்ள மத்திய கலாச்சார நிதியத்தின் சீகிரிய திட்டத்தின் திட்ட முகாமையாளர் உபுல் நிஷாந்த, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, தொல்பொருள் திணைக்களம், தம்புள்ளை பிரதேச சபை மற்றும் தம்புள்ளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் ஏனைய பிரதிநிதிகள் ஆகியோரால் விழிப்புணர்வு அறிவிப்புகளுடன் நிறுவப்பட்ட குப்பைத் தொட்டிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.