பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் 2021/22 நிதியாண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்துள்ளது
நிச்சயமற்ற நிலைகள் மற்றும் பல சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையின் வங்கியல்லாத நிதி நிறுவன துறையில் நம்பகமான முன்னணி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, 2021/22 நிதியாண்டை சாதனையுடன் நிறைவு செய்து மீண்டும் வரலாறு படைத்துள்ளது.
நிறுவனத்தின் வரிக்குப் பின்னரான இலாபம் 4.66 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளதோடு, நிறுவனம் 1996 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை பதிவு செய்த அதிகூடிய இலாபமாகவும் இது பதிவாகியுள்ளது.
வரிக்குப் பின்னரான இலாபமானது வருடா வருடம் 15.5% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, அதே நேரத்தில் வரிக்கு முன்னைய இலாபம் 6.65 பில்லியன் ரூபாய். இது வருடா வருடம் 13.2% வளர்ச்சியைக் குறிக்கின்றது.
என்றும் இல்லாத உயர் நிதி நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமிந்திர மார்செலின் “2021/2022 நிதியாண்டின் போது எங்களின் சிறப்பான நிதி செயல்திறன், ஊழியர்களின் அர்ப்பணிப்பு, பங்குதாரர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான உத்திகளை சீரமைத்தல் மற்றும் சாதகமான செயல்பாட்டு சூழலை உறுதி செய்வதற்கான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்தல் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். முன்னைய ஆண்டைப் போலவே, இந்த ஆண்டு, கொவிட்-19இன் மூன்றாவது அலைக்கு மத்தியில் கடினமான சவால்களைக் கொண்டுவந்தது, இது நாட்டின் பெரிய பொருளாதார குறிகாட்டிகளின் செயல்திறனைக் குறைத்து, வணிகங்கள் செயல்படுவதற்கு கடினமான சூழலுக்கு வழிவகுத்தது. எவ்வாறாயினும், ஒரு நிறுவனமாக, நாங்கள் இந்த சவால்களை சமாளித்து வரலாற்று நிதி செயல்திறனை பதிவு செய்துள்ளோம்.”
நிறுவனம், 2,000ற்கும் மேற்பட்ட அதன் ஊழியர்கள் மற்றும் இந்த கடினமான கட்டத்தில் உள்ளூர் சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்யும் அதேவேளையில் வரவேற்கத்தக்க வரிக்குப் பின்னரான இலாபத்தையும் அடைந்துள்ளது என ஷமிந்திர மார்செலின் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தின் செயல்படாத சொத்து விகிதம் சரிவைக் கண்டதோடு, இது கடன் அபாயத்தை நிர்வகிப்பதற்கும் மீட்டெடுப்புகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட முயற்சிகள் மற்றும் ஆதாரங்களை பிரதிபலிக்கிறது. கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகள் மீதான குறைபாடு கட்டணங்கள் 37.2 வீதமாக அதாவது, 1,044 மில்லியன் ரூபாயிலிருந்து 656 மில்லியனாக குறைவடைந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில், நிறுவனம் இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட மூலதனம் மற்றும் தடையின் அடிப்படையில் விதிக்கப்பட்ட தேவைகளை விட அதிகமாக நிலைத்திருக்க முடிந்தது. அதேவேளை, செயற்படாத கடன்களின் விகிதத்தை தொழில்துறை சராசரியை விட மிகக் குறைவாக பராமரிக்கிறது.
மேலும், இடர் முகாமைத்துவ, வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் கொள்கை கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பங்குதாரர்களை மையமாகக் கொண்ட தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிறுவனம் ஆண்டு முழுவதும் அதன் பங்குதாரர்களுக்கான மதிப்பை உருவாக்கி வந்தது.
“நிறுவனத்தின் கண்ணோட்டம் மிகவும் சவாலானதாக தோன்றுகிறது. தற்போதைய பணவீக்க அழுத்தம் மற்றும் அதிகரித்த கொள்கை விகிதங்கள் நிறுவனத்தின் கடன் புத்தகத்தை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்பை ஈடுகட்டவும், வருவாயை ஈட்டவும் மாற்று வழிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.”
நிறுவனம் தனது டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையை வருடம் முழுவதும் தொடர்ந்ததோடு, அந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, உள்ளக மற்றும் வெளிப்புற வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியது. இது இப்போது செலவுத் திறனை உயர்த்துவதற்கும் வாடிக்கையாளர்களுடன் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் முன்னோக்கிச் செல்வதற்கான முக்கிய முன்னுரிமையாக மாறியுள்ளது.
நிறுவனம் தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிதியாண்டில் ஆதரவாக இருந்ததோடு மற்றும் 38,000 வாடிக்கையாளர்களுக்கு 8.39 பில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டண ஒத்திவைப்பு காலத்தை வழங்கியது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்க, நிறுவனம் வாகன பறிமுதல் மற்றும் மறு திட்டமிடப்பட்ட கடன் வசதிகளை இடைநிறுத்தியது.
ஏனைய வருடங்களை் போலவே பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் சமூகத்திற்கு, குறிப்பாக வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பல கூட்டு சமூகப் பொறுப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
ஆண்டு முழுவதும் எதிர்கொள்ளப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும், 2021/22 நிதியாண்டில் பெறப்பட்ட பல்வேறு அங்கீகாரங்கள் மற்றும் பாராட்டுகள் மூலம் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸின் மீள்திறன் சித்தரிக்கப்பட்டது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஏற்பாடு செய்த 2021ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு அறிக்கையிடலின் வெளிப்படைத்தன்மையில் இலங்கையில் உள்ள 75 பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் முதல் 20 நிறுவனங்களில் நிறுவனம் இடம்பெற்றது. சிறந்த நிதிச் செயற்பாட்டின் அடிப்படையில் பிஸ்னஸ் டுடேயின் டொப் 40 (2020-2021) சிறந்த செயல்திறன் நிறுவனங்களில் 27ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், நிறுவனம் வெற்றியை நோக்கி வழிநடத்திய, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமிந்திர மார்செலின், உலக மனித வள மேம்பாட்டுக் காங்கிரஸினால் நடத்தப்பட்ட நிகழ்வான ‘இலங்கையின் சிறந்த பணியாளர் விருது 2022’ இன் ‘பிரதம நிறைவேற்று அதிகாரி 2022’ என்ற பட்டத்தைப் பெற்றார்.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, 1995ஆம் ஆண்டு மக்கள் வங்கிக்கு முழுமையாக சொந்தமான ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக இணைக்கப்பட்டது. இன்று இலங்கையர்களின் இதயத்தில் அதன் வர்த்தக நாமத்தை நிலைநிறுத்தியுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறைக்கு நிதியளிப்பதில் முக்கியப் பங்காற்றிய பீப்பள்ஸ் லீசிங், கொவிட்-19ற்கு பின் தங்கள் வணிகங்களை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ள சிரமங்களை வெற்றிகொள்வதற்காக தனியார் பயணிகள் போக்குவரத்து வாடிக்கையாளர் பிரிவினருக்காக புதிய நிவாரணத் திட்டமான “ஹித மிதுரு”வை அறிமுகப்படுத்தியது. வலுவான மூலதன நிலை மற்றும் இருப்புநிலைக் குறிப்புடன், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ், பிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா லிமிடெட் வழங்கும் “A+(Ika)” மதிப்பீட்டைக் கொண்டு, நாட்டின் மிக உயர்ந்த தரமதிப்பீடு பெற்ற வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாக பதிவானது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, இலங்கையில் உள்ள மக்களுக்கு குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத் துறைக்கு தொடர்ந்து சேவை செய்து, பரஸ்பர இலக்குகள் மற்றும் அபிலாஷைகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு ஆதரவளிக்கும்.
சுஜீவ ராஜபக்ச – தலைவர் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி
ஷமிந்திர மார்செலின் – பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் – பிஎல்சி