பீப்பள்ஸ் லீசிங் பெத்தகன ஈரநில பூங்கா பாதுகாப்பு பங்குதாரராக கைகோர்க்கிறது


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி பெத்தகன ஈரநில பூங்கா நிர்வாகத்துடன் கைகோர்த்து அடையாளம் காணப்பட்ட தேவையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் பற்றிய விழிப்புணர்வு அறிவித்தல் பலகைகளை நிறுவியுள்ளது. இந்த சுற்றுச்சூழல் முன்முயற்சியின் மூலம், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உதவுதல் மற்றும் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பற்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குக் அறிவூட்டும் முதன்மை நோக்கத்துடன் பெத்தகன ஈரநில பூங்காவுடன் இணைந்து பாதுகாப்பு பங்குதாரராக கைகோர்த்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்த்ர மார்செலின் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதிப் பொது முகாமையாளர் (செயற்பாடுகள் பிரிவு) லக்ஸந்த குணவர்தன ஆகியோர் முன்னிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றாடல் மற்றும் நிலப்பரப்புப் பிரிவின் பணிப்பாளர் சந்தன கலுபஹனவினால் இந்த விழிப்புணர்வு அறிவித்தல் பலகைகள் பொதுமக்களின் பார்வைக்காக 10 மார்ச் 2022 அன்று திறந்து வைக்கப்பட்டன. 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் நிலைத்தன்மையின் முகாமையாளர் ஹிஷான் வெல்மில்ல மற்றும் பெத்தகன ஈரநில பூங்காவின் பூங்கா முகாமையாளர் நர்மதா டங்கம்பொல மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி மற்றும் பெத்தகன ஈரநில பூங்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெத்தகன ஈரநில பூங்கா ஒரு முக்கிய வெள்ள தடுப்பு பகுதி மற்றும் இயற்கை அழகுடன் கூடிய இயற்கை பூங்காவாகும். அறிவிக்கப்பட்ட கோட்டே பறவைகள் சரணாலயத்திற்குள் பூங்கா அமைந்திருப்பதால், இது உயர் பல்லுயிர் மதிப்பைக் கொண்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்புப் பிரிவினால் இந்த பூங்கா நிர்வகிக்கப்படுகிறது. ஈரநில பூங்கா பல பறவைகள், பிற விலங்குகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள், தும்பி மற்றும் பாலூட்டிகள் போன்ற பூச்சிகளின் தாயகம் என்பதோடு, அவற்றில் சில இலங்கைக்கு உரித்தானவை. மேலும், பெத்தகன ஈரநில பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் மரங்களும் காணப்படுகின்றன.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி 2021ஆம் ஆண்டு தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வனவளத் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் 10 கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து, இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்துடன் இணைந்ததான, கன்னெலியா வனப் பிரதேசத்தை அண்மித்த ஒரு ஹெக்டேர் பாழடைந்த நிலத்தை மீட்டெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி கடந்த 2018 முதல் மூன்று வருடங்களாக தொடர்கின்றது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, பங்களாதேஷில் வெளிநாட்டுச் செயற்பாடுகள் உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கியல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ந்துள்ளது.

பெத்தகன ஈரநில பூங்காவில் உள்ள நுழைவு விழிப்புணர்வு பலகைகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றாடல் மற்றும் நிலப்பரப்புப் பிரிவின் பணிப்பாளர் சந்தன கலுபஹனவினால், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்த்ர மார்செலின் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதிப் பொது முகாமையாளர் (செயற்பாடுகள் பிரிவு), லக்ஸந்த குணவர்தன ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டன.