பீப்பள்ஸ் லீசிங் அதன் கிரியுல்ல கிளையை மேம்படுத்தி இடமாற்றம் செய்துள்ளது


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் கிரியுல்ல கிளை, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி கிரியுல்ல கொழும்பு வீதியில் உள்ள சமன் பெஷன் கட்டடத்திற்கு தனது அலுவலகத்தை இடமாற்றம் செய்துள்ளது.

புதிய வளாகத்தை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்திர மார்செலின் திறந்து வைத்தார்.

கிரியுல்ல கிளை 09 ஏப்ரல் 2014 அன்று திறந்து வைக்கப்பட்டதோடு தரமான சேவையை வழங்குவதன் மூலம் சில்லறை மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு எளிதான அணுகலை வழங்குகிறது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வங்கி அல்லாத நிதிச் சேவை அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவதோடு, புதிய தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் நிதித்துறையில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கும் வகையில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி அதன் அனைத்து மதிப்புமிக்க வாடிக்கையாளர்களையும் புதிய வளாகத்திற்குச் சென்று சிறந்த அனுபவத்தைப் பெற அழைப்பு விடுக்கின்றது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, பங்களாதேஷில் வெளிநாட்டுச் செயற்பாடுகள் உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கியல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ந்துள்ளது.

சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகளுடன் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் கிரியுல்ல கிளை ஊழியர்கள்
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்திர மார்செலின் (வலது), கிரியுல்ல கிளையின் முகாமையாளர் திஸ்ஸ தனேந்திராவுடன் (இடது) இணைந்து கிரியுல்ல கிளையை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்த சந்தர்பத்தில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் செயற்பாடுகள் (மையம்) பிரதிப் பொது முகாமையாளர்  லக்ஸந்த குணவர்தன உடனிருந்தார்.