சிஎம்ஏ சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2021 விழாவில் பீப்பள்ஸ் லீசிங் மீண்டும் இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது.
சிஎம்ஏ சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2021 விழாவில் பீப்பள்ஸ் லீசிங் மீண்டும் இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் நிதி தீர்வுகளை வழங்குபவரான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பீப்பள்ஸ் லீசிங்), ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில் இடம்பெற்ற, சிஎம்ஏ சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2021 விழாவில், இரண்டு முக்கிய விருதுகளை வென்றுள்ளது.
நாட்டின் முதன்மை முகாமைத்துவ கணக்கியல் அமைப்பான, இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தால், ஏழாவது தடவையாக ஏற்பாடு செய்யபட்ட, இந்த வருடாந்த நிகழ்வு, Taj Samudra ஹோட்டலின் Grand Marqueeஇல், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
2020/21 வருடாந்த அறிக்கையானது பீப்பள்ஸ் லீசிங்கின் 8ஆவது ஒருங்கிணைந்த அறிக்கை என்பதோடு, இது “” என்ற கருப்பொருளில் அமைந்திருந்தது. இது நிறுவனத்தின் கடந்த 25 வருட பயணத்தில் உறுதியான ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும், நிறுவனத்தின் வளர்ச்சிகான படிக்கல்லாகவும் இருப்பவர்களுக்கும் நன்றி செலுத்துவதாகவும் அமைந்துள்ளது.
நிறுவனத்தின் 2020/21 வருடாந்த அறிக்கையானது, நாட்டிலுள்ள “பத்து சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கைகளில்” ஒன்றாக இருந்ததோடு, “மூலோபாய கவனம் பற்றிய சிறந்த வெளிப்பாடு” என்ற ஒட்டுமொத்த விசேட விருதையும் பெற்றது.
வருடாந்த அறிக்கைக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் கிடைத்த தொடர்ச்சியான அங்கீகாரம், நிதி அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சமூகப் பொறுப்பை பேணுவதில் நிறுவனத்தின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது. இந்த வருட விருதுகள் இந்த பகுதிகளில் அடையப்பட்ட தரநிலைகளை பின்பற்றுவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டிற்கு மேலும் சான்றாக அமைந்துள்ளது.
இந்த சாதனையைப் பற்றி கருத்து வெளியிட்ட பீப்பள்ஸ் லீசிங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்திர மார்செலின், “பீப்பள்ஸ் லீசிங் வருடாந்த அறிக்கை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல முறை அங்கீகரிக்கப்பட்டது. இந்த அறிக்கை நமது நிதி ஸ்திரத்தன்மை, சமூகப் பொறுப்பு மற்றும் நல்ல நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டார். “சிஎம்ஏ சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2021’ வழங்கும் இந்த அங்கீகாரம், நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்திலும் ஒருங்கிணைந்த சிந்தனை நடத்தையை பிரதிபலிக்கிறது. “மூலோபாய கவனம் பற்றிய சிறந்த வெளிப்பாடு” என்ற விசேட விருது, அனைத்து பங்குதாரர்களுக்கும் தொடர்ச்சியான மதிப்பை உருவாக்கும் இலாபகரமான எதிர்காலத்தை நோக்கிய நிறுவனத்தின் பார்வையை பிரதிபலிக்கிறது.” எனவும் அவர் கூறினார்.
பீப்பள்ஸ் லீசிங் 1996ஆம் ஆண்டு இலங்கையின் மிகப் பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் பிரத்தியேகமான துணை நிறுவனமாக தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இன்று, இது கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு தொழில்துறையில் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா லிமிடெட் வழங்கும் “A+(Ika)” மதிப்பீட்டைக் கொண்டு, பீப்பள்ஸ் லீசிங், நாட்டிலேயே மிக உயர்ந்த தரமதிப்பீடு பெற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். மேலும், பிஸ்னஸ் டுடேயின் டொப் 40 (2020-2021) சிறந்த செயல்திறன் நிறுவனங்களில் 27ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, பிராண்ட் பினான்ஸ் லங்காவினால் (2021) வகைப்படுத்தப்பட்ட நிதிச் சேவைத் துறையில் மிகவும் மதிப்புமிக்க நுகர்வோர் நாமம் மற்றும் குத்தகைத் துறையில் மிகவும் விரும்பப்படும் நாமமாகவும் இது பதிவாகியுள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் நிதிச் சேவை தயாரிப்பு பிரிவில் குத்தகை, வாகனக் கடன்கள், நிலையான வைப்பு, சேமிப்புக் கணக்குகள், வீட்டு மற்றும் வணிகக் கடன்கள், தங்கக் கடன்கள், வர்த்தகம் (Margin), காரணியாக்கம் (Factoring) மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் ஆகியவை அடங்கும். பீப்பள்ஸ் லீசிங் குழுமம் ஆறு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது – பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-கொமர்ஸ் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ப்ரொப்பர்ட்டி டெவலப்மென்ட் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ப்ளீட் மெனேஜ்மென்ட் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்ட்டீஸ் லிமிடெட் மற்றும் அதன் வெளிநாட்டு முயற்சியான லங்கா அலையன்ஸ் ஃபினான்ஸ் லிமிடெட்.
பீப்பள்ஸ் லீசிங்கின் தனித்துவமான அம்சங்கள், பலவிதமான நிதித் தீர்வுகளை ஒரே கூரையின் கீழ் வழங்குவதற்கான வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை, தடையற்ற, வசதியான மற்றும் நட்புறவான வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை உருவாக்குகிறது.