PLC நிறுவனம் Technnovation விருதுகள் நிகழ்வில் தங்க விருதை வென்றது


வங்கி அல்லாத நிதிச் சேவைகளை வழங்குவதில் இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (PLC), டிஜிட்டல் சேவை வழங்கல் மூலமாக டிஜிட்டல்மயமாக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் நிதியியல் உள்ளடக்கத்தை விரிவுபடுத்தல் ஆகியவற்றில் காண்பிக்கும் அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டுக்காக மீண்டும் ஒரு முறை அங்கீகாரத்தை சம்பாதித்துள்ளது. அந்த வகையில், LankaPay Technnovation Awards 2024 விருதுகள் நிகழ்வில், LankaSign Digital Signatures 2022/23 தொழில்நுட்பத்தை கைக்கொண்டமைக்காக வருடத்தின் மிகச் சிறந்த நிதி நிறுவனத்திற்கான தங்க விருதை PLC பெற்றுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் திரு. பிரபாத் குணசேன அவர்கள் PLC இன் சார்பில் விருதைப் பெற்றுக்கொண்டார்.       

இது தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமீந்திர மர்சலீன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “LankaPay Technnovation Awards போன்ற புகழ்மிக்க மேடையில் இத்தகைய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றமை உண்மையில் மாபெரும் கௌரவம். எமது செயல்பாடுகள் மத்தியில் டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை முன்னெடுப்பதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது. இவ்வாறு செயல்படுவதனூடாக நாம் வாடிக்கையாளர்களுக்கான அனுபவங்களை சாதகமான வழியில் மாற்றியமைப்பதுடன், நிலைபேண்தகமை தொடர்பான எமது நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்கின்றோம்,” எனக் குறிப்பிட்டார்.

நிதியியல் தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கு விருதுகளை வழங்குகின்ற இலங்கையின் முதன்மை நிகழ்வாக LankaPay Technnovation Awards திகழ்ந்து வருகின்றது. 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விருதுகள் நிகழ்வு, நாடெங்கிலுமுள்ள மிகச் சிறந்த தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு அங்கீகாரமளித்து, இலத்திரனியல் வழிமுறை கொடுப்பனவுகளை ஊக்குவித்து, வாடிக்கையாளர் சேவை மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்களிப்புக்களை வழங்கும் நிறுவனங்களுக்கு விருது வெகுமதியை வழங்கி வருகின்றது. இவ்விருதுகளுக்கு பலத்த போட்டி காணப்படுவதுடன், விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய தேவை உள்ளதுடன், இதற்காக கிடைக்கப்பெறுகின்ற நுழைவு விண்ணப்பங்கள் அனைத்தும் தொழில்துறை வல்லுனர்களைக் கொண்ட சுயாதீன நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு, தெரிவு செய்யப்படுகின்றன.      மதிப்புமிக்க இந்த தங்க விருதை வென்றுள்ளமையானது, புத்தாக்கம் மற்றும் சூழல் நிலைபேண்தகமை இலக்குகள் (ESG) கட்டமைப்பிற்கு அமைவாக, தனது நிலைபேண்தகமை நோக்கங்களை அடையப்பெறுவதில் PLC இன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. டிஜிட்டலை உள்வாங்கும் மாற்றம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கம் ஆகியன நிதியியல் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை மேம்படுத்துவதுடன், காபன் அடிச்சுவட்டைக் குறைப்பதற்காக, காகித பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படுகின்ற முயற்சிகளுக்கான முனைப்புக்கும் இந்த திட்டம் அழைப்பு விடுகின்றது. National Best Quality Software Awards (NQBSA) 2023 விருதுகள் நிகழ்வில் Best Digital Process Enabler of the Year என்ற விருது, புத்தாக்கமான மற்றும் பயனர் நேய PLC Touch App இற்கான அங்கீகாரமாக, In-House Development இற்கான சிறப்பு விருது (Merit Award) அடங்கலாக, டிஜிட்டல் புத்தாக்கத்தில் அதன் சாதனைகளுக்காக PLC அண்மைக்காலங்களில் பெற்றுள்ள பல்வேறு விருதுகளின் மத்தியில் தற்போது இவ்விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது. தனது செயல்பாடுகள் அனைத்திலும் டிஜிட்டல்மயமாக்கத்தை உட்புகுத்தி, தொழில்துறையில் ஒரு முன்னோடியாகத் திகழும் தனது ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்துவதில் PLC இன் ஆதிக்கத்தை இவ்விருதுகள் உறுதிப்படுத்துகின்றன.