பிஎல்சி உலக சிறுவர் தினத்தை சிறப்பாக கொண்டாடியது


இலங்கையின் முன்னோடி வங்கி அல்லாத நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் (பிஎல்சி) விளையாட்டு மற்றும் நலன்புரிச் சங்கம், “சிஹின தகின அபே லொவக்” என்ற தொனிப்பொருளில் உலக சிறுவர் தினத்தை கொண்டாடியது.

ஒரு பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில், 17 வயது வரையான ஐந்து வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் நாடளாவிய ரீதியில் இயங்கும் பிஎல்சியின் ஊழியர்களின் பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வெகுமதி அளிக்கும் ஒரு  முயற்சியாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கமைய சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம் மற்றும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களால் 250ற்கும் மேற்பட்ட சிறுவர்களால் வெளிப்படுத்தப்பட்ட பாடல், நடனம் மற்றும் கலைத்திறன்கள் சுயாதீனமாக மதிப்பீடு செய்யப்பட்டன. விருது வழங்கும் விழா 2022 ஒக்டோபர் 27ஆம் திகதி பிஎம்ஐசிஎச்சில் 45 வெற்றியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. பிரதம அதிதியாக பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் ஷமிந்திர மார்செலின்  மற்றும் நிறுவன முகாமைத்துவக் குழுவினர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு முன்னதாக வெற்றி பெற்ற சிறுவர்கள் கொழும்பு நகரில் இரட்டை அடுக்கு பேருந்தில் நகரை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

பிஎல்சி என்பது நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். விசேட குத்தகை நிறுவனமாக 1996 இல் செயற்பாடுகளை ஆரம்பித்த பிஎல்சி 2011இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பிஎல்சியானது  பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட நிபுணத்துவத்தின் தொடர்புடைய பகுதிகளில் ஆறு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

பிஎல்சியின் கூட்டு முகாமைத்துவத்தின் முன்னிலையில் போட்டி வெற்றியாளர்கள்