இஸ்லாமிய சேமிப்பு


முழாறபா சேமிப்புக் கணக்கு

முழறரபா எனும் சேமிப்புக் கணக்கு, ரூபா 1000.00 த்துடன் இக்கணக்கை ஆரம்பிக்க முடியுமாவதுடன், பணத்தை மீளப்பெறல் அல்லது பணப் பரிமாற்றங்கள் என்பவற்றில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லையென்பதுடன், குறைந்த பண மீதியை பேணும் பட்சத்தில் எவ்வித மேலதிக கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது. கணக்குரிமையாளருக்கு சர்வதேச அங்கீகாரமுடைய வீசா பற்று அட்டையும் வழங்கப்படும் அத்துடன் பணப்பரிமாற்றங்களை SMS மூலமாக அறிந்துகொள்ளும் வசதியும் பெற்றுக்கொடுக்கப்படும். கணக்குரிமையாளருக்கு ஒரு நாளைக்கு ஆகக்கூடியது ரூபா 100,000/- வரை மீளப்பெறும் வாய்ப்பு.

  • இலாபம் முன்கூட்டி இணங்கப்பட்ட விகிதத்தில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படும் (PSR 45:55)
  • குறைந்தபட்ச வைப்பு ரூ.1,000/-
  • எந்தவொரு மக்கள் வங்கி டெலர் இயந்திரத்தில் இருந்தும் வீசாவுக்கு இணக்கமான எந்தவொரு டெலர் இயந்திரத்தில் இருந்தும் பண மீளப்பெறுதல்களைச் செய்ய உதவும் வீசா சர்வதேச பற்று அட்டை வழங்கப்படும்.
  • பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (உள்நாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM).
  • பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (வெளிநாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM). .
  • SMS விழிப்பூட்டல்கள்.
  • எந்தவொரு கிளையிலும் பண வைப்பு மற்றும் மீளப்பெறுதலைச் செய்யலாம்..
  • இலவச நிலையான கட்டளை வசதி.
  • ஒன்லைன் (Online) வங்கிச் சேவை வசதி.

உஸ்ஃபூர் சிறுவர் சேமிப்புக் கணக்கு

இது சிறுவர்களுக்கே உரிய பிரத்தியேகமான சிறுவர் சேமிப்புக் கணக்காகும். இதன் மூலம் சிறந்ததொரு சந்தைப் பெறுமதி கணக்கிற்கு பெற்றுக்கொடுப்பதுடன், இலாபம் மாதாந்தம் கணக்கெடுக்கப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படும். ஆகக்குறைந்த முதலீடாக ரூபா 500/- வைப்பிலிடப்படல் வேண்டும். பணமானது பெற்றோர் அல்லது பாதுகாவலரினால் மருத்துவ அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காக மீளப் பெற்றுக்கொள்ளப்படலாம். உங்கள் குழந்தை பருவ வயதை அடையும்பட்சத்தில் கணக்கு சாதாரண முழாறபா சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.

  • கணக்கை ஆரம்பிப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச முதலீடு ரூ. 250/-.
  • பிள்ளையின் சார்பில் பெற்றோர்/பாதுகாவலர் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
  • இலாபம் முன்கூட்டி இணங்கப்பட்ட விகிதத்தில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படும் (PSR 47:53).

சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்கு

இச் சேமிப்புக் கணக்கு “முதாரபாஹ்” அடிப்படையில் செயற்படும்.

  • இலாபம் முன்கூட்டி இணங்கப்பட்ட விகிதத்தில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படும் (PSR 50:50).
  • குறைந்தபட்ச வைப்பு ரூ.1,000/-
  • எந்தவொரு மக்கள் வங்கி டெலர் இயந்திரத்தில் இருந்தும் வீசாவுக்கு இணக்கமான எந்தவொரு டெலர் இயந்திரத்தில் இருந்தும் பண மீளப்பெறுதல்களைச் செய்ய உதவும் வீசா சர்வதேச பற்று அட்டை வழங்கப்படும்.
  • பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (உள்நாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM).
  • பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (வெளிநாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM).
  • SMS விழிப்பூட்டல்கள்.
  • எந்தவொரு கிளையிலும் பண வைப்பு மற்றும் மீளப்பெறுதலைச் செய்யலாம்..
  • இலவச நிலையான கட்டளை வசதி.
  • ஒன்லைன் (Online) வங்கிச் சேவை வசதி.

12 மாத முழாறபா முதலீட்டுத் திட்டம்

12 மாத முழாறபா சான்றிதழானது நடுத்தர-தவணை வைப்பாவதுடன், முதலீட்டுக்காலம் ஒரு வருடத்துக்கு மட்டுமுரியதாகும். குறித்த கால முதிர்வில் வருமானம் வழங்கப்படுவதுடன், முதலீட்டை தொடரவும் சந்தர்ப்பம் வழங்கப்படும். ஆகக் குறைந்த முதலீடாக ரூபா 100,000/- தேவைப்படுவதுடன், (விதவைகள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு இத்தொகை ரூபா 50,000/- ஆகும். மேலும் மாதந்தம் இலாபம் அங்கு வழங்கப்படும்). முதிர்வு காலத்துக்கு முன்னர் முன்னறிவிப்புடன் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளவும் முடியும். இலாபமானது, உயர் ரீதியில் கணக்கெடுக்கப்பட்டு முதலீட்டாளர்கள் அல்லது வைப்பாளர்களுக்கு வழங்கப்படும். சிரேஷ்ட பிரஜைகளுக்கும் இம்முதலீட்டின்போது சாதாரண முழாறபா முதலீட்டிலும் பார்க்க கூடியளவு இலாபம் பகிர்ந்தளிக்கப்படும்.


குறுகிய கால முதுராபா முதலீட்டு கணக்கு

3 – 6 மாத தவணை வரையிலான முழாறபா சான்றிதழானது குறித்த கால முதிர்வில் வருமானம் வழங்கப்படுவதுடன் ஆகக்குறைந்த முதலீட்டுக் கட்டணமாக ஐம்பதினாயிரம் (ரூ. 50,000.00) ரூபாயும் அதிகூடிய எல்லையற்ற முதலீடுகளையும் மேற்கொள்ளலாம். முதிர்வுக் காலத்தின் முன்னனி முன்னறிவிப்புடன் பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளவும் முடியும். வாடிக்கையாளர் முதலீட்டுக் காலத்திற்கேற்ப இலாபப்பங்கு அமையும்.