இஸ்லாமிய முதலீடுகள்
சேமிப்புகள்
1.முதாரபாஹ் சேமிப்புக் கணக்கு – இச் சேமிப்புக் கணக்கு “முதாரபாஹ்” அடிப்படையில் செயற்படுகின்றது.
- இலாபம் முன்கூட்டி இணங்கப்பட்ட விகிதத்தில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படும் (PSR 45:55)
- குறைந்தபட்ச வைப்பு ரூ.1,000/-
- எந்தவொரு மக்கள் வங்கி டெலர் இயந்திரத்தில் இருந்தும் வீசாவுக்கு இணக்கமான எந்தவொரு டெலர் இயந்திரத்தில் இருந்தும் பண மீளப்பெறுதல்களைச் செய்ய உதவும் வீசா சர்வதேச பற்று அட்டை வழங்கப்படும்.
- பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (உள்நாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM).
- பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (வெளிநாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM). .
- SMS விழிப்பூட்டல்கள்.
- எந்தவொரு கிளையிலும் பண வைப்பு மற்றும் மீளப்பெறுதலைச் செய்யலாம்..
- இலவச நிலையான கட்டளை வசதி.
- ஒன்லைன் (Online) வங்கிச் சேவை வசதி.
2.உஸ்ஃபூர் சிறுவர் சேமிப்புக் கணக்கு – இது, சிறுவா்களுக்கான இலாபப் பகிர்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் கணக்காகும். முதலீட்டின் மூலம் சம்பாதிக்கப்படும் இலாபத்தில் கூடுதலான பங்கை இது வழங்குகின்றது.
- கணக்கை ஆரம்பிப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச முதலீடு ரூ. 250/-.
- பிள்ளையின் சார்பில் பெற்றோர்/பாதுகாவலர் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
- இலாபம் முன்கூட்டி இணங்கப்பட்ட விகிதத்தில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படும் (PSR 47:53).
3.சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்கு -இச் சேமிப்புக் கணக்கு “முதாரபாஹ்” அடிப்படையில் செயற்படும்.
- இலாபம் முன்கூட்டி இணங்கப்பட்ட விகிதத்தில் கணிக்கப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்படும் (PSR 50:50).
- குறைந்தபட்ச வைப்பு ரூ.1,000/-
- எந்தவொரு மக்கள் வங்கி டெலர் இயந்திரத்தில் இருந்தும் வீசாவுக்கு இணக்கமான எந்தவொரு டெலர் இயந்திரத்தில் இருந்தும் பண மீளப்பெறுதல்களைச் செய்ய உதவும் வீசா சர்வதேச பற்று அட்டை வழங்கப்படும்.
- பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (உள்நாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM).
- பற்று அட்டை/ATM மீளப்பெறுதல்கள் (வெளிநாட்டு) நாள் ஒன்றிற்கு ரூ.100,000/- வரை. அல்லது கொள்வனவுகள் நாள் ஒன்றிற்கு ரூ.150,000/- வரை (POS மட்டும்/ POS + ATM).
- SMS விழிப்பூட்டல்கள்.
- எந்தவொரு கிளையிலும் பண வைப்பு மற்றும் மீளப்பெறுதலைச் செய்யலாம்..
- இலவச நிலையான கட்டளை வசதி.
- ஒன்லைன் (Online) வங்கிச் சேவை வசதி.
முதாரபாஹ் கால முதலீடு
- இந்த முதலீட்டுச் சான்றிதழ் இலாபப் பகிர்வுக் கோட்பாடுகளின் அடிப்படையிலானது. இலாபம் முன்கூட்டியே இணங்கப்பட்ட விகிதத்திற்கேற்பப் பகிர்ந்துகொள்ளப்படும்.
- 3, 6 மற்றும் 12 மாதங்களில் தொடங்கும் காலப்பகுதிகளுக்கேற்ப கவர்ச்சியான இலாபப் பங்கு வழங்கப்படும். பின்வரும் காலப்பகுதிகளைத் தெரிவு செய்யலாம்:
- 12 மாத மாதாந்த மற்றும் 12 மாத முதிர்ச்சித் திட்டங்களுக்காக, சிரேஷ்ட பிரஜைகள் கால முதலீட்டுக் கணக்குகளுக்கு கூடுதலான இலாபப் பகிர்வு விகிதம் வழங்கப்படும்.
- தகுதியுள்ள வைப்புப் பொறுப்புகள் நாணயச் சபையினால் அமுல் செய்யப்படும் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஒரு வைப்பாளருக்கு ஆகக்கூடியதாக ரூ.1,100,000/- என்ற அடிப்படையில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
03 மாதங்கள் – இலாபம் முதிர்ச்சியில்
06 மாதங்கள் – இலாபம் முதிர்ச்சியில்
12 மாதங்கள் – இலாபம் முதிர்ச்சியில்
12 மாதங்கள் – இலாபம் மாதாந்தம்
12 மாதங்கள் – இலாபம் காலாண்டுதோறும்
வகாலா (கால அடிப்படையிலான முதலீடு)
- ஒரு நபர் (முவக்கில்) ஷரிஆவுக்கு அமைவான வியாபாரத்தில் தான் முதலீடு செய்யும் பணத்தை நிர்வகிப்பதற்காக முகவர் (வக்கீல்) ஒருவரை நியமிக்கும் வகையில் செய்துகொள்ளும் ஒப்பந்தம் இதுவாகும்.
- எதிர்பார்க்கப்படும் இலாப விகிதங்கள் 1 மாதம் முதல் 2,3,6,12,13,15,18,24 மாதங்கள் வரையான காலப்பகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
- வாடிக்கையாளரின் தெரிவுக்கேற்ப இலாபம் முதிர்ச்சியில் அல்லது மாதாந்தம் வழங்கப்படும்.