செனசும் பியச வீடமைப்புக் கடன்


PLC “செனசும் பியஸ” வீட்டுக் கடன் திட்டம் சாதாரண நடைமுறைகளைவிட இலகுவான கடன் சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு முற்றிலும் உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையில் மாற்றம் செய்யப்பட்டால் அல்லது அது விற்கப்பட்டால் கூட இக் கடனைத் தீர்க்கவோ அல்லது கடன் வசதியை முடிவுறுத்தவோ தேவையில்லை.

உங்கள் வீட்டுக் கனவை நனவாக்குவதற்காக கடனாளியை மாற்றும் வசதி பிணைச் சொத்தின் பதிலீடு 5 ஆண்டுகள் வரையான சலுகைக் காலம் உள்ளடங்கலாக நீடித்த இலகுவான மீளளிப்புக் காலம் ஆகிய சிறப்புக் கூறுகளைக் கொண்ட PLC வீட்டுக் கடன் திட்டம் உங்களுக்கு ஓர் உன்னதமான நிதித் தீர்வாகும்.


நாம் உங்களுக்கு வழங்குவது

  • ஆகக்கூடியதாக 15 ஆண்டுகள் வரையான கடன் மீளளிப்புக் காலம்
  • மூலக் கடன் தொகையை மீளளிக்க 60 மாதங்கள் வரையான சலுகைக் காலம்
  • 3 வேலை நாட்களுக்குள் கடனுக்கு அங்கீகாரம் மற்றும் 7 தினங்களுக்குள் பணம் கைக்குக் கிடைக்கும்
  • காணிப் பதிவேட்டின் சாராம்சம், நகல் உறுதிப்பத்திரம், உள்ளுராட்சி ஆவணங்கள், வீதி எல்லைகள் சுவீகரிப்புத் தவிர்ப்பு மற்றும் காணி உரிமை போன்றவை தொடர்பான அவசிய ஆவணங்களைப் பெறுவதற்கு உதவி செய்யப்படும்
  • பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கடன் பக்கேஜ், குறைந்தளவு ஆவணங்கள், விரைவான மற்றும் எவ்வித பிரச்சினைகளும் அற்ற நடைமுறையுடன் உங்கள் வாசலடியிலேயே வழங்கப்படும் சேவை
  • உங்கள் மீளளிப்பு ஆற்றலுக்கும் வசதிக்கும் உகந்த தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள்
  • உங்கள் மீளளிப்பு ஆற்றலைக் கணிக்கும்போது உங்கள் தற்போதய மற்றும் எதிர்கால வருமானம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்
  • எந்த நேரத்திலும் பகுதிக் கொடுப்பனவு மூலம் கடன் தவணைகளை அல்லது கடன் காலத்தைக் குறைக்க முடியும்
  • கடன் காலப்பகுதிக்குள் சொத்தை (பிணையை) எவ்வித மேலதிக கட்டணங்களுமின்றி, அதே விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன், மாற்றிக்கொள்ள முடியும்
  • சொத்தின் உரிமை மற்றும் ஒப்பந்தத்தை கைமாற்றிக்கொள்ள முடியும்
  • வீட்டிலுள்ள உபகரணங்கள் மற்றும் பொருள்களுக்கு இலவச காப்புறுதி