அல்-ஸபா பற்றி
இலங்கையின் மிகப் பெரிய வங்கித் துறை சாராத நிதி நிறுவனமாகிய பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.யின் (PLC) ஒரு பகுதியான அல் சஃபா இஸ்லாமிய நிதிச் சேவைகள் பிரிவு (AIF Unit/ the Unit), இஸ்லாமிய நிதிச் சேவைத் தொழிலை 2005ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தது. இன்று இப் பிரிவு இலங்கையில் இஸ்லாமிய நிதிச் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. AIF பிரிவின் வாடிக்கையாளர்களுள் தொழில் நிறுவனங்கள், தொழில் முயற்சிகள், பண வசதி கொண்ட தனிப்பட்டவர்கள் மற்றும் பிரதானமாக வியாபாரம், போக்குவரத்து, விவசாயம், சேவைகள் போன்ற பொருளாதாரத் துறைகளில் ஈடுபட்டுள்ள தொழில் நிபுணர்கள் அடங்குகின்றனர். AIF பிரிவு, நெறிமுறையான, ஷரிஆவுக்கு அமைவான நிதி விருப்பத்தேர்வுகளை மிகவும் போட்டி அடிப்படையிலான வீதத்திலும் எமது மதிப்பார்ந்த வாடிக்கையாளர்களின் தற்போதய சந்தைத் தேவைகளை ஈடுசெய்யும் விதத்திலும் வழங்குகின்றது. முற்றிலும் ஷரிஆவுக்கு அமைவான வியாபார நடவடிக்கைகளிலேயே இந்த நிதித் தளம் பயன்படுத்தப்படுகின்றது.
உத்தேச வாடிக்கையாளர்களுக்கு இஸ்லாமிய நிதிச் சேவைகளை வழங்குவதற்காக 7 பிரத்தியேக கிளைகளை நிறுவனம் கொண்டுள்ளது. அத்துடன், நாடெங்கிலுமுள்ள வழமையான PLC கிளைகளும் இஸ்லாமிய நிதித் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான வசதிகளைக் கொண்டுள்ளன.